Spread the love

காஞ்சிபுரம் செப், 26

மக்களின் பணத்தை ஏமாற்றிய தனியார் நிறுவனங்களை கண்டித்தும் மக்களின் பணத்தை திரும்ப தரக்கோரியும் இந்த வழக்கை சிபிஐ. வசம் மாற்றக்கோரி தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது.

மாநில மாணவரணி செயலாளர் சங்கர், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கர், மாநில மாணவர் அணி தலைவர் யுவராஜ், மாநில மாணவரணி துணைத்தலைவர் அஜித் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மதுராந்தகம் தெற்கு வட்டார தலைவர் ஆதிகேசவலு, வடக்கு வட்டார தலைவர் பழனி, கருங்குழி பேரூராட்சி தலைவர் உலகநாதன் கிரிதரன், குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *