ராமநாதபுரம் செப், 25
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு முதன்மை செயலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதன்மை செயலாளர் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், தமிழக அரசின் முதன்மைச்செயலரும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் களிமண்குண்டு கடற்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ஊராட்சி தலைவர்கள் வண்ணாங்குண்டு தியாகராஜன், திருப்புல்லாணி கஜேந்திரமாலா, தாதனேந்தல் கோகிலா ராஜேந்திரன், களிமண்குண்டு வள்ளி மற்றும் ஒன்றிய நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்