நெல்லை செப், 23
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.
பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இதேபோல் சீவலப்பேரி பஞ்சாயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்புவிழா விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளி கல்வி அதிகாரி முருகன், தலைமையாசிரியர் மனோகர், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேஷ் உமாமகேஷ்வரி, அனுசியா, குமரேசன், ஜெயசேகர், பிச்சுமணி, இசக்கிபாண்டி, தசதாசிவம், தங்கவிநாயகம், மாரியப்பன், மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
