வேலூர் செப், 22
அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், சமையல் கூடம் உள்ளிட்டவைகளை அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் வருகை பதிவேடு மற்றும் மாணவர்களுக்காக செலவிடப்படும் உணவுப் பொருட்களின் கணக்கு வழக்குகளையும் பார்வையிட்டார். அப்போது விடுதிக்காப்பாளரிடம் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் சமையல் செய்ய வேண்டும், அவர்கள் தங்கும் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு வட்டாட்சியர் திருக்குமரேசன் உடன் இருந்தார்.