Spread the love

நெல்லை செப், 21

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கலையரசி ( வயது 47). இவர் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வேலைக்காக சென்றார். அப்போது அங்கு குட்டியுடன் ஒரு கரடி நின்று கொண்டிருந்தது. கலையரசியை பார்த்ததும் அந்த கரடி அவரை தாக்கத்தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கரடியிடம் இருந்த தப்ப முயன்றுள்ளார். ஆனால் கரடி தொடர்ந்து தாக்கியதில் கை, மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. கலையரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடியது. இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த கலையரசியை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்கனவே கரடி இப்பகுதிக்கு வந்து செல்வதை நாங்கள் பார்த்தோம். தற்போது பனை பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அதன் வாசனைக்கு இப்பகுதியில் கரடி வருகை அதிகரித்துள்ளது.
எனவே கரடி நடமாட்டத்தை கண்காணித்து நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *