காஞ்சிபுரம் செப், 18
மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை வகித்து மின்கட்டண உயர்வை கண்டித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி, வாலாஜாபாத் நகர செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் அரிக்குமார், மாங்காடு நகர அதிமுக செயலாளர் மாங்காடு பிரேம்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.