செங்கல்பட்டு செப், 18
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சியில் உள்ள மறைமலைநகர், வல்லாஞ்சேரி, பொத்தேரி விரிவு பகுதி, தைலாவரம், கீழக்கரணை, சட்டமங்கலம், பேரமனூர் மற்றும் பேரமனூர் விரிவு போன்ற கிராமங்களில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் 969 பேருக்கு மறைமலைநகர் திருவள்ளுவர் சாலை மற்றும் பேரமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் இருந்து தினந்தோறும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.