தேனி செப், 16
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.