திருவனந்தபுரம் செப், 16
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட பிறகு, ராகுல் காந்தி நேற்று ஒருநாள் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரையை’ எட்டாவது நாளான இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கினார்.