மும்பை செப், 15
ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியாவை எப்படியெல்லாம் முன்னேற்றுவது என்பது குறித்து டாடா குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர் இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக மாற்றப்போவதாக ஏற்கெனவே டாடா தெரிவித்துள்ளது.
மேலும், ஏர் இந்தியாவுக்கு புதிய தலைமை நிர்வாகியாக கேம்பெல் வில்சன் நியமிக்கப்பட்டார். ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்களை வாங்குவதற்கும் டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், நிறுவனத்தை ரீபிராண்ட் செய்து பெயரை மாற்றப்போவதாக ஏர் இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஏர் இந்தியாவின் பெயர் ‘விஹான்’ (Vihaan) என பெயர் மாற்றப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான விரிவான திட்டங்கள் குறித்தும் ஏர் இந்தியா இன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ஏர்லைன் மார்க்கெட்டில் 30% பங்கை பிடிக்கவும், சர்வதேச ஏர்லைன் மார்க்கெட்டில் வளர்ச்சியை பெற ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.