கரூர் செப், 13
காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட சமூக அலுவலர் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து கடந்த மூன்று நாட்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கரூர் காந்திகிராம அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுமார் மதியம் ஒரு மணி அளவில் துவங்கிய பேச்சு வார்த்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அரசு வேலை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.