கரூர் செப், 13
மாவட்ட சி.ஐ.டி.யு.வின் பொதுக்கூட்டம் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நாகை. மாலி, மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து, பொதுக்கூட்டம் நடைபெற்ற லைட்ஹவுஸ் கார்னர் வரை சி.ஐ.டி.யு.வினர் பேரணியாக வந்தனர்.