சென்னை செப், 12
முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 ம் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து முழங்கி வருகிறார்.
இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தைத் தொகுத்து திமுக தலைமைக் கழகம் சார்பில் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 144 பக்கம் கொண்ட இந்நூலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மேலும் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘திராவிட மாடல்’ நூலை வெளியிடுகிறார். திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு முதல் நூலை பெற்றுக் கொள்கிறார்.