Spread the love

நெல்லை செப், 12

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பாலருவி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

மேலும் பயணிகளை இறக்கி விட்ட பிறகு ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக, ரயில் நிலையத்தில் இருந்து ரயில் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ‘பிட் லைன்’ எனப்படும் பராமரிப்பு பகுதிக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

இதற்காக ரயில் பெட்டிகள் தச்சநல்லூர் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, பிட் லைன் நோக்கி மெதுவாக பின்னுக்கு தள்ளப்பட்டது. அப்போது பிட்லைன் அருகே வந்து கொண்டிருந்த பொது தூங்கும் வசததி கொண்ட இரண்டாம் வகுப்பு எஸ்-3 பெட்டியின் சக்கரங்ள் திடீரென்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

இதைத் தொடர்ந்து என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில் நுட்ப ஊழியர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் மீட்பு பணி நடந்தது. ஜாக்கி உதவியுடன் தடம் புரண்ட ரெயில் பெட்டியின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் நிலைய தண்டவாளத்தின் மீது நிறுத்தப்பட்டது.

மேலும் ரெயில் தடம் புரண்டது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *