தூத்துக்குடி செப், 11
தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 18-வது ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு தடகள விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்க பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மற்றும் காவல் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.