திருப்பதி செப், 10
ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி வந்தார்.
இதையடுத்து திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இரவு திருமலையில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.