திருவண்ணாமலை செப், 10
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மேற்பார்வையில், மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து செங்கம் நகரத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
செங்கம் வட்டம், போளூர் சலையை சேர்ந்த கோபி என்பவர் வீட்டின் மேல் அறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது