திருவண்ணாமலை செப், 10
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸகார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான அணியினர் ஜமுனாமரத்தூர், பதிமலை காட்டு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த சாராயம் முழுவதும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.