சென்னை செப், 8
ஓணம் பண்டிகை இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டாக ஓணம் திருநாள் விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும், ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழகத்தில் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை, வசந்த கால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.