புதுடெல்லி செப், 6
இந்தியாவில் அடுத்த ஒரு ஆண்டுக்கு நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களின் முதன்மை (டைட்டில்) ஸ்பான்சராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
அதில் 2022-23 ம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும். இதற்காக பிசிசிக்கு மாஸ்டர் கார்டு எவ்வளவு தொகையை செலுத்தும் என்பது வெளியிடப்படவில்லை.
ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் பிசிசிஐ சார்பில் நடைபெறும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு மாஸ்டர் கார்ட் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் உள்நாட்டு போட்டிகளுக்கு மட்டுமே.
பெண்கள் அணி மற்றும் ஆண்கள் தேசிய ஆணி போட்டிக்கு மாஸ்டர் கார்டு நிதியுதவி செய்யும். உள்நாட்டு சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல் தேசிய அளவில் இராணி டிராபி, துலிப்ராபி மற்றும் ரஞ்சிடிராபி போன்றவற்றையும் மாஸ்டர் கார்ட் ஸ்பான்சர் செய்யும். இது தவிர உள்நாட்டு ஜூனியர் அணி போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்ட் ஸ்பான்சர் ஆக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.