நெல்லை செப், 5
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாரால் தக்கர் மகளிர் கல்லூரியில் சமூக அனல் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.