அரியலூர் செப், 5
ஆதார் எண் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. ஒ.கூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டா் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களுக்கு முகாம் குறித்து அறியும் வண்ணம் அறிவிப்பு செய்திடவும், பள்ளி வளாகத்தில் முன்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.