கடலூர் செப், 4
பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்களை சீரமைப்பது குறித்தும், போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.