நெல்லை செப், 3
கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவில் வாசல் முன் நின்று சுவாமியை அழைத்தார். ஆனால் நெல்லையப்பர் காட்சி கொடுக்காததால் கோபம் அடைந்த சித்தர் வடக்கு நோக்கி பயணித்தார்.
பின்னர் மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அப்போது தாமதமாக வந்தாலும் தரிசனம் தருவார் நெல்லையப்பர் என கூறினார்.
அதேபோல் நெல்லை யப்பர் மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சி அளித்தார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நெல்லையப்பர் கோவிலில் கடந்த 26 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் திருவிழாவான இன்று இரவு 7 மணிக்கு கருவூர் சித்தர் எழுந்தருளி ரதவீதி வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார்.
மேலும் 10ம் திருவிழாவான நாளை நள்ளிரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிபரணி தேவி, அகத்தியர், குங்கலிய நாயனார் ஆகியோர் மானூர் அம்பலவாணர் சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு 5 ம் தேதி அதிகாலை சென்றடைகின்றனர்.
காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி அளித்து சாப விமோசனம் நிவர்த்தி அளிக்கும் வைபவம் நடக்கிறது