நெல்லை செப், 3
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. வி.கே.புரம் பகுதியில் உள்ள ஆசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 100 -க்கும் மேற்பட்டவர்கள் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை வி.கே.புரம் நகராட்சி மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் கொடியசைத்து தொடங்கி வைக்க, ஆறு கிலோமீட்டர் தூரத்தை மாணவ மாணவிகள் சைக்கிள் மூலம் பேரணியாக வந்து நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அதற்கான விழிப்புணர்வு வாசகங்களை எழுதி சைக்கிள் முன்பு வைத்துக் கொண்டு பேரணியில் கோஷமிட்டு கொண்டு வந்தனர்.
பின்னர் பள்ளியை வந்தடைந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது.