அதிமுக அழியக்கூடாது என்று திருமா தொடர்ச்சியாக அட்வைஸ் செய்வது கூட்டணி கணக்குக்காக அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார். அதிமுகவை அழித்துவிட்டு அவ்விடத்தை பாஜக பிடிக்க நினைப்பதாகவும், இந்த சதித்திட்டத்துக்கு அதிமுக ஆளாகிறதே என்ற ஆதங்கத்தில்தான் அப்படி சொல்வதாகவும் கூறினார். மேலும், EPS-க்கு சமூகநீதி மீது எந்த பற்றும் இல்லை என்ற அவர், அதிமுக என்ன வாய்ப்பு கொடுத்தாலும், அங்குபோக வாய்ப்பே இல்லை என்றார்.