புதுடெல்லி ஜூலை, 28
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து லோக்சபாவில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சிகள், இன்று காரசாரமான விவாதத்தை நடத்த காத்திருக்கின்றன. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.