மும்பை ஜூலை, 24
நீண்ட நாள்களுக்கு பிறகு நேற்று சற்று மீண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிந்து 82,612 புள்ளிகளும், நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 25,206 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. Hero Motocorp, Reliance, Coal India, Kotak Mahindra உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.