சென்னை ஜூலை, 23
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், பாஜக – அதிமுக கூட்டணி தெளிவாக இருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவி வருவதாக சாடினார்.