திருவாரூர் செப், 2
திருவாரூர் மாவட்ட தொடராச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக மாவட்ட துணை தலைவர் பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தார். உடன் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.