குரூப்-4, குரூப்-2 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்வுக்கு முன்னர் அதிகரிக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. இந்தாண்டுக்கான குரூப்-4 அறிவிப்பில் 3,935 பணியிடங்கள் மட்டுமே வெளியானது அதிர்ச்சியை தந்தது. இத்தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுவார்கள். பணியிடங்களின் எண்ணிக்கை மாறும் என்ற அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.