சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அதிகாரி சரவணன் 36/25 என்பவர் புகார்தாரரிடம் இருந்து ரூ.3000/-ம் லஞ்சமாக தரணும் எனக்கேட்டுள்ளார். அதில் ரூ.1000/-ஐ முன்பணமாக g -pay மூலம் நேற்று பெற்றுள்ளார்.
மேற்படி மீதம் உள்ள லஞ்சபணம் ரூ. 2000/-ஐ இன்று வெகுமதியாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சரவணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களயுமாக பிடித்தனர்.
மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்