பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும் பொருளியலில் 99/100 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 98/100 மதிப்பெண்ணும் எடுத்து அசத்தியுள்ளார்.
இப்பள்ளியின் மாணவி ஹனா 583/600 இரண்டாமிடமும் ஃபாதின் ரஹா 581/600 மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.ரஹுஃபத் ஃபரீஹா வணிகவியல் 100/100, ஹனா கணக்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களில் 100/100, ஹைருல் ஹிமானா கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 100/100 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
இப்பள்ளியின் அனைத்து மாணவியரும் 100% தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி மரியம்ஹலிலா 586/600 மதிப்பெண் பெற்று கீழக்கரை அளவில் இரண்டாமிடமும் கணக்கியல்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.இவர் கீழக்கரை 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நசுருதீன் மகளார் என்பது கூடுதல் தகவல்.
இப்பள்ளியின் மற்றொரு மாணவி மதீனத்துல் ஜசீரா வணிகவியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி கவி பிரியா 585/600 மதிப்பெண் பெற்று கீழக்கரை அளவில் மூன்றாமிடமும்,நவதர்ஷினி 584/600,நஸாஹா 583/600 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இப்பள்ளியின் மாணவியர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் பத்து பேர் 100/100 மதிப்பெண்களும், வணிகவியல்,பொருளியல்,கணக்கியல்,கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடங்களில் தலா ஒருவர் 100/100 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 14 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் என்னும் புரட்சிகர சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஃபேர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி நூர் ஆபிதாபானு 583/600 மதிப்பெண் பெற்று அப்பள்ளியின் முதல் மாணவியாக சாதித்துள்ளார்.இப்பள்ளியின் மாணவி ரோஷன் ருஹைனா வணிகவியலில் 100/100, சசின் சஜினா பொருளியலில் 100/100 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவியரும் தேர்ச்சி பெற்று 100% சதமடித்துள்ளனர்.
தீனியா மெட்ரிக் பள்ளி மாணவி நுஸ்ரத் ஃபாலிஹா 572/600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி மரியம் பீவி 569/600 , சமீரா 566/600, வர்ஷினி 560/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய இப்பள்ளியின் 163 மாணவியரும் தேர்ச்சி பெற்று 100% சதமடித்திருப்பதோடு, 33 மாணவியர் 500க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர்.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகை லட்சுமி 550/600 மதிப்பெண் பெற்றுள்ளார்.இப்பள்ளியின் மற்றொரு மாணவி அகமது சஃப்ரின் கணக்கியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மக்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவி இர்ஃபான் பாத்திமா 511/600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகம்மது மிஸ்பா 505/600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வழக்கம் போல் இவ்வாண்டும் மாணவர்களை விட மாணவியரே மகத்தான சாதனை புரிந்து ஊருக்கும் பள்ளிகளின் நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவர்,மாணவியர்களுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும்,நிர்வாகங்களுக்கும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் MKE உமர் மற்றும் இம்பாலா சுல்தான் அறக்கட்டளை தலைவர் இம்பாலா சுல்தான் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.
நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பிலும் பாராட்டுகிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.
மேலும் செய்திகளைப் ப