பஹல்காம் தாக்குதலை அடுத்து தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக நாடு திரும்ப உள்ளார்.
இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, அவர் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 20-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர் 5 நாள்கள் அமெரிக்கா மற்றும் பெரு பயணத்தை திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.