விழுப்புரம் செப், 2
செஞ்சி அடுத்த எம்ஜிஆர்.நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம் போக்குநிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்ட கிடைக்காத சிலர், மீண்டும் மனு அளித்தனர். ஆனால் அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிஅறிந்த அவர்கள், ரேசன் கார்டுகள், வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க போவதாக கூறி செஞ்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் தாசில்தார் நெகருன்னிசா அலுவலகத்தில் இல்லாததால் அவர்கள் அங்கிருந்த துணை வட்டாட்சியரிடம் மனு கொடுத்து விட்டு், திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.