சென்னை ஏப், 1
இபிஎஸ் – செங்கோட்டையன் மீண்டும் இணைந்துவிட்டதாக அதிமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதற்குக் காரணம், இணையத்தில் வைரலாகும் நேற்றைய ரமலான் வாழ்த்து பதிவுதான். செங்கோட்டையன் பெயரில் உள்ள அந்த X பக்கத்தில் இபிஎஸ் போட்டோவுடன் அந்தப் பதிவு போடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இபிஎஸ்ஸை லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவரும் செங்கோட்டையன், நேற்று, “மவுனம் அனைத்தும் நன்மைக்கே” எனக் கூறியது கவனிக்கத்தக்கது.