சென்னை செப், 2
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது.
இந்த விழாவினையொட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது திமுக. பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரியை சேர்ந்த சிக்ஷதிருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும்.
இந்த விருதுகள் 15 ம்தேதி விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் என திமுக தனது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.