சென்னை மார்ச், 19
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும், இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.