கேரளா செப், 2
கேரளா கொச்சின் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி போர்க் கப்பலை நாட்டுக்கு அளிக்கிறார். மேலும் இந்திய கடற்பரை காண தனிச் சின்னத்தையும் அறிமுகம் செய்கிறார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் ஆகும். இந்த ஐ என் எஸ் விக்ராம் போர்க்கப்பல் 20,000 கோடியில் 13 ஆண்டுகளாக கட்டப்பட்டது. 262 மீட்டர் நீளமும் 59 உயரமும் கொண்ட விக்ரம் 45 ஆயிரம் டன் எடையை கொண்டது. 2200 பெட்டிகள் 1200 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 1700 பேர் வரை பயணிக்க முடியும். விக்ராந்த் போர்க்கப்பலில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும் கப்பலில் நாலு எஞ்சின்கள் மூலம் ஒரு சிறிய நகரத்திற்கான மின்சாரத்தை தயாரிக்க முடியும். கப்பலில் 16 படுக்கைகள் இரண்டு ஐசியூ மற்றும் ஆபரேஷன் தியேட்டர்கள் என அதிநவீன மருத்துவமனையை கொண்டுள்ளது 51 கிலோமீட்டர் வேகத்தில் 7500 நாட்டிகல் மைல் தூரத்திற்கு இந்த கப்பல் பயணிக்கும்.
மேலும் இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார் ஏற்கனவே இருந்த கடற்கரையின் கொடியில் சென்சார்ஜ் சிலுவையுடன் மேற்புறத்தில் தேசியக் கொடியும் இடம்பெற்று இருக்கிறது இந்நிலையில் இந்த செஞ்சிலுவை இல்லாமல் கடற்படைக்கான புதிய கொடி வெளியிடப்படுகிறது இனிமேல் இந்திய கடற்படையின் அனைத்து கப்பல்களிலும் தளங்களிலும் இந்த கொடியை பயன்படுத்தப்படும்.