கோவை பிப், 25
கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.