சென்னை பிப், 25
தமிழகத்தில் கான்ஸ்டபிள்கள் மாதம் ரூ.18,200 முதல் ரூ.52, 900 வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது தமிழக காவல்துறை ஆணையம் மாத ஊதியத்தை ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. பிற மாநில காவல் துறையிலும் மத்திய அரசாலும் அளிக்கப்படும் ஊதியத்தை சுட்டிக்காட்டி இதை பரிந்துரைத்துள்ளது பரிந்துரை அமலானால் ஆயிரக்கணக்கான ஊதிய உயர்வு பெறுவர்.