சென்னை ஜன, 29
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் நீதிபதி மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திடீரென இரண்டு செருப்பையும் கழட்டி நீதிபதி மீது அவர் வீசினார். நல்வாய்ப்பாக நீதிபதி மீது அவை படவில்லை வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த ஆத்திரத்தில் செருப்பை அவர் வீசியதாக கூறப்படுகிறது