கீழக்கரை ஜன, 8
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் ஊருக்குள் பரவலாக மது மற்றும் போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத போதை பொருள் விற்பனையை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கீழக்கரை புதிய பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரகுல தமிழர்படை தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட பெரியாரிஸ்டுகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தடை செய் தடை செய் சட்டவிரோத போதை பொருள் விற்பனையை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்