கீழக்கரை டிச, 25
KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் 4வது வார்டு கவுன்சிலர் சூரியகலா மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் மீரான் அலி தலைமையில் குடி தண்ணீர் தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடிநீர் தொட்டியின் கல்வெட்டை கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா திறந்து வைத்தார். குடிநீர் பைப்பை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK நலன் விரும்பும் சங்கத்தின் கௌரவ தலைவருமான அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர்(சீனா தானா)திறந்து வைத்து கீழக்கரை 4வது வார்டு பொதுமக்கள் குடி தண்ணீர் பிடித்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் KLK நலன் விரும்பும் சங்கத்தின் துணை தலைவரும் தெற்குத்தெரு ஜமாத் தலைவருமான உமர் களஞ்சியம் ஹாஜியார், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர்,அல்மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளியின் தலைவரும், KLK நலன் விரும்பும் சங்கத்தின் செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, கண்ணாடி வாப்பா எஸ்டேட் நிர்வாகி சித்திக்,5வது வார்டு கவுன்சிலர் காயத்ரி,வார்டு முன்னணி தலைவர்கள் சங்குத்துரை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், முருகானந்தம் ஜெயராமன் ரவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் கருப்புசாமி கிருஷ்ணன் முரளி சுப்புராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முடிவில் தோழர் மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.