சென்னை அக், 30
யானை பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2021 நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் 10,000 என்றும் அவர்களுக்கான ஓய்வு கால பயன்களின் மதிப்பு ரூ.3,000 கோடி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் 8ல் 1-பங்கு அளவிற்கு ரூ.372.6 கோடியே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.