சென்னை அக், 15
மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகன ஓட்டிகள் பலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் கார்களை பாதுகாக்க மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை மறுத்த காவல் துறை கட்டுப்பாட்டு அறையை அணுகினால் பார்க்கிங் தகவல்களை பகிர்வதாக அறிவித்துள்ளது.