சென்னை அக், 15
வீடுகளில் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் போது வாஷர் வாழ்வு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கருவிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வாஷர், வால்வு சரியாக இல்லாத சிலிண்டர்களை திருப்பி அனுப்பலாம் எனவும், இச்சோதனையை ஊழியர்கள் மேற்கொள்ளவில்லையெனில் சிலிண்டர் ரசீதில் உள்ள போன் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.