சென்னை செப், 28
அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கணக்கு இல்லா மாணவர்களுக்கு உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான நிலையிலும் பயன்பாடு இல்லாத நிலையிலும் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.