ராமநாதபுரம் செப், 24
ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மேற்பார்வை பொறியாளர் ராமநாதபுரம் மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.