சென்னை செப், 20
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 27ம் தேதியுடன் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. பின்பு 28ம் தேதி முதல் அக்டோபர் 2- வரை ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 3ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.